ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று (17.01.2023) செலுத்தியது.
நேற்று மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தினர்.
நுவரெலியா மாவட்டத்தில் 11 சபைகளுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சி செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.










