நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 25 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 25 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திம்புள்ள – பத்தன சுகாதார பிரிவில் 10 பேருக்கும், ஹட்டன் சுகாதாரப்பிரிவில் 14 பேருக்கும், வலப்பனையில் ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 796 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 வீதமானோர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 122 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles