நுவரெலியாவில் போதைப் பொருள் பொதி மீட்பு?

நுவரெலியாவில் குப்பைகளை சேகரிக்கும் இடத்தில் இருந்து போதை பொருள் என சந்தேகிக்கப்படும் பொதி ஒன்று நுவரெலியா பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் பொலிதீன் சேகரிக்கும் இடத்தில் போதை பொருள் என சந்தேகிக்கப்படும் பொதி ஒன்று நுவரெலியா பொலிசாரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா அரச புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த பொதியை நுவரெலியா குற்றத் தடுப்பு பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
விளையாட்டு துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த காணியில் நுவரெலியா மாநகர சபை ஊழியர்களால் வெற்று போத்தல்கள் பொலிதின் போன்றவற்றை இந்த இடத்தில் சேகரித்து களஞ்சியப்படுத்தியுள்ளனர்.இதன் ஒரு பகுதியிலேயே மிகவும் சூட்சுமமான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிக்கப்பட்ட பொதியில் இருப்பது போதை பொருளா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த பொதியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரி புலனாய்வுத்துறை உடுகம சூரியவின் பணிப்புரையின் பேரில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விஜேசூரிய தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles