பண்டாரவளையில் ஐந்து சிறார்கள் தப்பியோட்டம் – காப்பக பொறுப்பாளர் கைது!

சிறுவர் காப்பகத்தின் 5 சிறுவர்கள் அங்கிருந்துதப்பிச் சென்றுள்ளனர். இதற்கு உதவிய காப்பக உதவிப் பொறுப்பாளர் பண்டாரவளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.பண்டாரவளை சிறுவர் காப்பகத்திலேயே, நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெற்றோரினால் கைவிடப்பட்ட மற்றும் நீதிமன்ற உத்தரவிற்கமைய இக்காப்பகத்தில் தடுத்துவைக்கப்பட்ட சிறுவர்களில் ஐவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன ஜயதிலக்க தலைமையிலான குழுவினர் விரைந்து,சிறுவர்களை மீட்டதுடன், இச் சிறுவர்கள் தப்பிச் செல்லஉதவியகாப்பக உதவிப் பொறுப்பாளரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட காப்பக உதவிப் பொறுப்பாளர் தற்போது விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகள் நிறைவுற்றதும், காப்பக உதவிப் பொறுப்பாளர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிசந்தன ஜயதிலக்கதெரிவித்தார்.

எம். செல்வராஜா

Paid Ad