பல்கலை மாணவர்கள் போராட்டம்மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு, பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பத்தரமுல்லை , தியத்தன உயன பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் காவல்துறையினரின் வீதித் தடையினை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்ல முற்பட்ட போது, பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles