பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று

பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோ (Jean Castex) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். உடனடியாக அவர் தன்னைத் தனிமைப்படுத்தி உள்ளார். அவரோடு தொடர்புகளைக் கொண்டிருந்த அமைச்சர்கள் பத்துப் பேர் வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

முதலில் பதினொரு வயதுடைய தனது மகளுக்குத் தொற்று உறுதியானதைஅடுத்து உடனடியாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் பிரதமர். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் நேற்றிரவு தெரிவித்தது.

சுகாதார விதிகளின் படி அவர் பத்துநாட்கள் தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்படவுள்ளார். பிரதமர் இதற்கு முன்னர் சில தடவைகள் தொற்றாளர்களோடு தொடர்பு கொண்டிருந்த காரணத் துக்காகத் தனிமைப்படுத்தலில் இருந் துள்ளார். எனினும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியிருந்த அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாகப் பிரதமர் நேற்றுக்காலை பல கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். பிரெசெல்ஸ் நகரில் பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவையும் (Alexander De Croo) அவர் சந்தித்திருந்தார்.

Related Articles

Latest Articles