புதிய சபாநாயகருக்கு சபையில் மனோவும், ஜீவனும் வாழ்த்து!

9 ஆவது பாராளுமன்றத்துக்கு சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசனும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் இன்று முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தேர்வு இடம்பெற்ற பின்னர் கட்சி தலைவர்கள், புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதன்போது இந்திய வம்வாசளி மக்கள் சார்பிலும், பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இளம் உறுப்பினர்கள் சார்பிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் ஜீவன் தொண்டமான் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Related Articles

Latest Articles