நாராங்கலை பகுதியில் புதையல் தோண்டிய நால்வரை கைது செய்துள்ளதாக கலஉட பொலிஸார் தெரிவித்தனர்.
கலஉட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்கலை பகுதியில் புதையல் தோண்டுவதாக கலஉட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நால்வரை கைது செய்துள்ளதாக கலஉட பொலிஸார் தெரிவித்தனர்.
31,46,54,45 வயதுடைய ஹாலிஎல உணுகலை, நுவரெலியா, பூண்டுலோயா,
பிஷோபண்டாரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை கலஉட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா