எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.
அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்பு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
இதன்படி 36 அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், 15 ஆம் திகதி முதற் சுற்று போட்டிகளும் 16 ஆம் திகதி காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன










