பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருவதால், கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிஸார் கோரியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில், போலி நாணயத்தாள்களை சந்தைப் புழக்கத்தில் விடுவதற்கு மோசடியாளர்கள் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பொலிஸ் நிலையங்களில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.எனவே, அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
பணத்தை மாற்றும் போதும் மீதிப்பணம் பெறும் போது மிகவும் அவதானத்துடன் அதனை கையாள வேண்டும். பெண்கள் தனியாக செல்லும் போது அதிக நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களுடன் செல்வதனை தவிர்ப்பது நல்லது.
பஸ்களில் பணப் பைகளை வெட்டி எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










