‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மஞ்சணத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வ ராஜ் வழங்கும் இந்தப் படத்தை ஃபார்சூன் என்டர் டெயின்மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். சென்னையில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷுடன் மாரி செல்வ ராஜ் இணையும் வரலாற்றுத் திரைப்படத்தின் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்துக்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அதற்கிடையே ‘மஞ்சணத்தி’ படம் உருவாக இருக்கிறது. இதில் கயாடு லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.










