மின் கட்டணம் 22.5 வீதத்தால் குறைப்பு

நாட்டில் நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் மின் கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதற்கமைய 0 முதல் 30 வரையான மின் அலகு ஒன்றின் கட்டணம் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 8 ரூபாவாக இருந்த கட்டணம் 6 ரூபாவாக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 20 ரூபாவாக இருந்த கட்டணம் 9 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0 முதல் 60 வரையான மின் அலகு ஒன்றின் கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அலகொன்றின் புதிய விலை ரூ. 15.

61 முதல் 90 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அலகொன்றின் புதிய விலை ரூ. 18.

91 முதல் 120 வரையிலான அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 50 ரூபாவாக இருந்த கட்டணம் இனி 30 ரூபா என்ற அடிப்படையிலேயே அறவிடப்படும்.

121 முதல் 180 வரையிலான அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 50 ரூபாவாக இருந்த கட்டணம் இனி 42 ரூபா என்ற அடிப்படையிலேயே அறவிடப்படும்.

வீட்டுப் பாவனை மின் கட்டணம் 27 சதவீதத்தினாலும், மத ஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 30 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் கைத்தொழிற்துறைக்கான கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறைவடைகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles