மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு  கடற்கரையில் வந்து இறங்கினர்.

இலங்கை தமிழர்களை மீட்ட ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 129  ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

Latest Articles