மே -09 சம்பவத்துக்கு மஹிந்தவும் பொறுப்புகூறவேண்டும்! டிலான்

இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என ஏப்ரல் மாதம் முதல் வலியுறுத்தி வந்தேன். சபாநாயகரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தேன். பிரதமர் பதவி விலகாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினேன்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியெல்லாம் நடந்துதான் பிரதமர் பதவி விலகினால், சிலவேளை காலை 9 மணிக்கு பிரதமர் பதவி விலகியிருந்தால்கூட வன்முறை வெடித்திருக்காது. எனவே, மஹிந்த ராஜபகக்சவும் பொறுப்புக்கூற வேண்டும்.

பிரதமராக ரணில் தெரிவாகியுள்ளார். அவரை கடுமையான விமர்சித்தவன் நான். ஆனால் சர்வதேச ஒத்துழைப்பை பெறக்கூடிய நபர் அவர். எனவே, அவருக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles