லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ மளமளவென 50,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. இதில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்திருக்கிறது.

சுமார் 7,500 தீயணைப்பு படையினர், ஏராளமான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தண்ணீர் பற்றாக்குறை, தீயணைப்பு படையினர் ற்றாக்குறை, காற்றின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தீயை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. ஏராளமானோர் தீக்காயம் அடைந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

Related Articles

Latest Articles