வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Related Articles

Latest Articles