வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகுந்த எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படுகிறது. தூதரக ஊழியர்கள் தங்குமிடமித்தில் இருக்க அறிவுத்தப்படுகிறார்கள்.

வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை கேட்டால் கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், கீவ் நகரில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை தினசரி நிகழ்வாக்கி விட்டது என்றாலும், இந்த எச்சரிக்கை அதன் தனித்தன்மையால் அசாதாரணமான ஒன்று.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கினார். பிரையான்ஸ் பகுதியில் உள்ள ஆயுதக்கிடங்கின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டிய மறுநாள் இந்த வான்வழி தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது.

முன்னதாக, மேற்​கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்த வேண்​டும் என்று புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். எனினும், மேற்​கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வந்தன. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடு​கள், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணையை பயன்​படுத்த உக்ரனைக்கு அனுமதி வழங்​கினால், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான போராக அது மாறும் என்று புதின் எச்சரித்​திருந்​தார்.

மேலும், அணு ஆயுத பயன்​பாட்டுக் கொள்​கை​யில் மாற்றம் கொண்டு​வரப் போவதாக ரஷ்யா கூறி வந்தது. கடந்த செப்​டம்பர் மாதத்​தில் சில மாற்​றங்கள் செய்​யப்​பட்டன. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட அறிக்கையில், “தற்​போதைய சூழ்​நிலைக்கு ஏற்ப எங்களது அணு ஆயுதக் கொள்​கை​களில் மாற்றம் கொண்டு வருவது முக்​கி​யம். அணு ஆயுதங்களை தவிர்ப்​ப​தற்கான வழிகளையே நாங்கள் பார்க்​கிறோம்.

ஆனால், அவற்​றை பயன்​படுத்த வேண்டிய சூழ்​நிலைக்கு தள்ளப்​பட்​டால், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த நேரிடும். அணு ஆயுதம் இல்லாத நாடு அணு ஆயுதம் வைத்​திருக்​கும் நாட்டுடன் இணைந்து போரில் ஈடுபட்​டால் அது கூட்டு தாக்குதலாகவே கருதப்​படும்” என்று தெரி​வித்​தது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles