மடுல்சீமை, மஹதோவ பகுதியில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மடுல்சீமை – மஹதோவ தோட்டத்தின் லோவர் டிவிசனுக்கு செல்லும் பாதையை புனரமைத்து தருமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெற்றது.
தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் வீதியை மறித்து தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன் காரணமாக குறித்த வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. காலை 7.30 மணிமுதல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நடராஜா மலர்வேந்தன்

