ஹெரோயினுடன் நானுஓயாவில் ஒருவர் கைது!

நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) திடீர் சோதனை நடவடிக்கையின் போது புகையிரதத்தில் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் மிகவும் சூட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட போதை பொருள் 410 மில்லிகிராம் நிறையுடையது எனவும் சந்தேகநபர் ஈசி கேஸ் முறையில் போதை பொருள் விநியோகிப்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது அத்துடன் குறித்த சந்தேக நபர் மாவத்தகம பகுதியை சேர்ந்தவர் எனவும் 34 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் சந்தேக நபர் இன்று முற்படுத்தப்பட்டார்.

நானுஓயா நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles