அதிபர், ஆசிரியர்கள் ராகலை நகரிலும் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு சுபோதினி அறிக்கையின் படி மூன்றில் இரண்டு பங்கு (2ஃ3) சம்பள நிலுவையை வழங்க கோரி (12.06.2024) மாலை வலப்பனை வலய பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் இராகலை நகரில் பேரணியாக சென்று கவன ஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முடித்து கொண்டு மாலை 2.30 மணிக்கு மேல் வீதிக்கு இறங்கிய அதிபர், ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி இராகலை நகரில் அரசாங்கத்திற்கும்,கல்வி அமைச்சுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது

*மூன்றில் இரண்டை வழங்கு,

* கல்வி சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு கொடு,

*ஏமாற்றுக் கல்விக் கொள்கையை கிழித்தெறியப்பட்டன,

*கல்வியில் தனியாரை திணிக்காதே,

*சம கல்வியை நிலை நாட்டு,

* கல்வி உபகரணங்களின் விலையை குறைத்திடு,

* அதிபர் சீராக்கல் படியை வழங்கிடு,

*ஆசிரியரின் உதவி தொகையை உடனே கொடு,

* பொது சொத்துக்களை விற்காதே,

*கல்விக்கு ஆறு வீதம் ஒதுக்கு, போன்ற வாசகங்களை பதாகைகளில் எழுதியவாறு கோஷங்களை ஓங்க ஒலித்து போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

-ஆ.ரமேஸ்-

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles