அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விளாசித் தள்ளிய ரணில்!

அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் வேலைத்திட்டம் அதில் உள்ளடங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாவனல்லை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள தொங்கு பாலத்தின் பயணம் தொடர வேண்டும் எனவும், தொங்கு பாலம் வெட்டப்பட்டால் ஆற்றில் விழ நேரிடும் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி, வரி வருமானம் குறைக்கப்பட்டால், அரச வருமானம் 200 பில்லியனுக்கு மேல் குறையும் என்றும், அவர்கள் கூறுவது போல், பொருட்களின் விலையை குறைக்கவும் முடியாது என்றும், அரச வருமானத்தைக் குறைத்து, செலவினங்களை அதிகரித்து பொருளாதாரத்தை எவ்வாறு பேணுவது என்ற கணிதப் பிரச்சினையை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

”இதற்கு முன்னர் மாவனல்லையில் ஐ.தே.க மேடைகளில் தான் உரையாற்றியுள்ளேன். இன்று சகலருடனும் பேச வந்துள்ளேன். நாடு நெருக்கடியான சூழலில் இருக்கையில் கட்சியை மறந்து நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்படுமாறு எமது தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன எமக்கு கற்பித்துள்ளார். 1971 இல் ஜே.வி.பி கலவரத்தின் போது ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாக ஐ.தே.க தலைவர் அறிவித்தார். ஜே.ஆர் ஜெயவர்தனின் புதல்வர் கைதாகியிருந்தார்.

அந்தப் பிரச்சினையை பின்னர் தீர்க்கலாம் என அவர் தெரிவித்தார். 1989 ஜே.வி.பி கலவரத்தின் போது சிறிமாவோ அம்மையார், பிரேமதாஸவைச் சந்தித்து ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்தார். பிரேமதாஸ கொல்லப்பட்ட போது நாட்டை ஸ்தீரப்படுத்த உங்கள் தரப்பில் இருந்து ஜனாதிபதி ஒருவரை நியமிக்குமாறு சிறிமாவோ அம்மையார் கோரினார்.

அன்று நாடு நெருக்கடியாக இருந்த போது கட்சிகள் அவ்வாறு இணைந்து செயற்பட்டன. இன்று எம்முடன் பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என அனைத்துக் கட்சிகளும் உள்ளன. ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ ஆகியோரை பின்பற்றினால் கட்சி அரசியலுக்கு அப்பால் நாடு குறித்து சிந்தித்து செயற்படலாம்.

நான் வேறொரு கட்சியில் இணைந்துள்ளதாக யாராவது சொன்னால் அது தவறு. ஏனைய கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்வேன். எதிர்க்கட்சித் தலைவர் தான் மாற்று பிரதமர். ஐ.தே.க அங்கத்தவராக இருந்திருந்தால் 2 வருடங்களுக்கு முன்னர் பிரதமர் பொறுப்பை சஜித் ஏற்றிருக்க வேண்டும். அவர் ஏற்கவில்லை. ஏற்காவிட்டால் அவர் ஐ.தே.கவை சேர்ந்தவரல்ல.

அன்று கேஸ், எரிபொருள், மருந்து வரிசை இருந்தது. வன்முறை வெடித்தது. அனைவரும் கஷ்டப்பட்டனர். எத்தனை மணிநேரம் வரிசையில் இருந்தீர்கள்? அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பினால் நாம் இணைந்து நாட்டை மீட்டோம். நாம் பொருளாதார ஸ்தீர நிலையை நோக்கிச் செல்கிறோம். வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது. அந்த சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். வருமானத்தை அதிகரிக்க வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதி வருமானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாம் இதுவரை பயணித்த பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும். அந்தப் பாதையில் இருந்து விலக முடியாது. வரி அறிவிடுவதை நிறுத்துவதாக சிலர் செல்கின்றனர். தொங்கு பாலத்தை வெட்டி விட்டுச் சென்றால், ஆற்றில் தான் விழ நேரிடும். ஜே.வி.பி.யின் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் குறைந்த பட்சம் 200 பில்லியனுக்கு மேல் வருமானம் குறையும். வரி வருமானம் குறைந்தால், எப்படி செலவுகளை அதிகரிக்க முடியும். அந்தப் பொருளாதாரக் கணக்கு தெரியாமல் தொங்கு பாலத்தின் இரு பக்கங்களையும் வெட்டி விடத் தயாராகிறார்கள்.

232 பக்கங்களுடன் கூடிய விஞ்ஞாபனத்தை நேற்று வாசித்தேன். அதனை அனைவரும் படிக்க வேண்டும். அதற்கு ஓரிரு மாதங்கள் செல்லும். ஆனால் 21 ஆம் திகதி வாக்குச் சாவடிக்குச் சென்று கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தொங்கு பாலத்தை கைவிடாமல் தான் நாம் இந்தப் பயணத்தை செல்ல வேண்டும்.

பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தி, அதன் பயனை உங்களுக்கு வழங்க வேண்டும். அதனால் தான் 5 வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி ஏற்றுமதி வருமானத்தை உயர்த்தி, அடுத்த வருடம் முதல் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்போம். தொழில் வாய்ப்புகளை உருவாக்குவோம்.

வருமானம் அதிகரிக்கும் போது வரியைக் குறைப்போம். உறுமய, அஸ்வெசும என்பவற்றை தொடர்வோம். இது தான் எனது திட்டம். பொருளாதார முகாமைத்துவத்தை ஏற்படுத்தி வருமானத்தை அதிகரிப்பதோடு பொருட்களின் விலைகளைக் குறைக்கலாம். அடுத்த வருடம் முதல் படிப்படியாக வரியை குறைப்பது குறித்து சிந்திக்க முடியும். தற்பொழுது அதனை செய்ய முடியாது. பருப்பு, சீனி, எரிபொருள் விலைகள் தற்பொழுது குறைந்துள்ளன.

அவற்றை மேலும் குறைக்க வேண்டும். புதிய வருமான வழிகள், பொருளாதார முன்னேற்றத்துடன் முதலீடுகள் அதிகரித்தால் வரிச் சுமையைக் குறைக்கலாம். சுற்றுலா பயணிகள் அதிகரித்து, கைத்தொழில்கள் உருவாகும்போது வருமானம் உயரும். விவசாய நவீன மயமாக்கலுடன் பொருளாதாரம் உயரும்.

பலமான பொருளாதார அடித்தளமொன்று ஏற்படுத்தியுள்ளோம். நிதி சார்ந்த 4 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.ம.ச இன்றும் தமது கொள்கை என்ன என்று தெரியாதுள்ளது. ஒருபக்கம் ஹர்ஷ தனது கொள்கை என்று ஒன்றை சொல்கிறார். கொடஹேவா வேறொன்றை சொல்கிறார். வியாழக்கிழமை எமது முழுமையான தொலைநோக்குடைய திட்டத்தையும் கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக அறிவிப்போம்.

புதிய இலங்கையொன்றை உருவாக்குவோம். உங்களுக்கும் புதிய இலங்கை ஒன்றை உருவாக்க வேண்டும். பொருளாதார முறையை மாற்ற வேண்டும். இளைஞர் கையில் பணம் இருக்க வேண்டும். நாம் இணைந்து முன்னோக்கிச் செல்வோம்.

விவசாய நவீனமயமாக்கலை டட்லி சேனாநாயக்கவிடம் இருந்து தான் கற்றேன். அதனை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். இருப்பதை பாதுகாக்கப் போகிறீர்களா? இருப்பதை அழித்துக் கொள்ளப் போகிறீர்களா? 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லையெனில், கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் எனக்கு குறை சொல்லாதீர்கள். ” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles