பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, முகநூலில் அச்சுறுத்தியமை குறித்து, ஹாலி-எலைப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஊவா மாகாண சபை முதலமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராகவே, முகநூலில்
அச்சுறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹாலி-எலைப் பொலிஸ் நிலையம் சென்று, முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து, ஹாலி-எலைப் பொலிசார் குறிப்பிட்ட நபரைக் கைது செய்து, விசாரணைக்குற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதுகாப்பு
மேலும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமாரின் பதுளைப் பணியகத்திற்கு பலத்த
இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப் பாதுகாப்பின் மத்தியிலும், பெருந்தோட்ட மக்கள் தத்தம் தேவைகளுக்காக, பதுளை
பணியகத்திற்கு வந்து போவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
