இரத்தினபுரியில் இம்முறை பலமுனைப் போட்டி

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 423 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய ஆயிரக்கணககான வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

ஒரு மாநகர சபை மற்றும் இரண்டு நகர சபைகள் 14 பிரதேச சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, பெரட்டுகாமி ஜனநாயக முன்னணி, சோஷலிசக் கட்சி உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சுயேட்சை அணிகள் பல இரத்தினபுரி மாவட்டத்தில் இத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தலுக்காக 148 கட்சிகளும் சுயேட்சை அணிகளும் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் 134 அரசியல் கட்சிகளும் 6 சுயேட்சை அணிகளும் மாத்திரமே வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒரு சுயேட்சை அணி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எஹலியகொடை பிரதேச சபைக்கு ஐக்கிய சோஷலிஷ முன்னணி குருவிட்ட பிரதேச சபைக்கு பெரட்டுகாமி சோஷலிச கட்சி மற்றும் ஒரு சுயேட்சை அணி, கலவான பிரதேச சபைக்கு பெரட்டுகாமி சோசலிச கட்சி, ஜனநாயக முன்னணி மற்றும் கொலன்ன, பெல்மதுளை பிரதேச சபைகளின் இரு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.மேலும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட 02 கட்சிகளின் இருவரின் பெயர்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.

இரத்தினபுரி மாவட்டத்தில் 258 உறுப்பினர்கள் நேரடி வாக்குகள் மூலமும் 156 உறுப்பினர்கள் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles