இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு’ முன்னோடி வேலைத்திட்டத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்

எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் (TRCSL) இணைந்து நாடு முழுவதிலும் தமது வலைத்தளத்தில் காணப்படும் இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்காக ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு’ வேலைத்திட்டத்திற்காக தமது ஒத்துழைப்புக்களை வழங்குகிறது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இரத்தினபுரி மாவட்டத்தில் புதிய 37 கவரேஜ் வலையங்களை நிறுவும் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களுடன் இந்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பின்தங்கிய கிராமிய பிரதேசங்களை டிஜிட்டல் மயமாக்கலால் மேம்படுத்துவதன் மூலம் அனைத்து நபர்களுக்கும் அவர்களது அன்றாட வேலைகளுடன் தொடர்புபடுத்தும் வகையில் மிகவும் சிறந்த விதத்தில் அதனை மேற்கொள்வதற்கும் மற்றும் எவ்வித இடையூறுகளும் இன்றி தொடர்ச்சியாக தொலைத்தூர கற்றல் மற்றும் நெகிழ்வான சேவை தேவைகளுக்கும் இது உதவியாக அமையும்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இணைந்து கருத்து தெரிவித்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க, ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு’ அங்குரார்ப்பண வேலைத்திடத்தின் கீழ் இலங்கை எதிர்காலத்தில் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் அதற்குரிய சேவைகளுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வலய கேந்திரமாக வேகமாக முன்னேற்றுவதற்கு தேவையான அடித்தளத்தை அமைக்கும் வகையில் நாம் இன்று தைரியமான முடிவொன்றை எடுத்துள்ளோம்.

இதனூடாக பின்தங்கிய கிராமப்புற பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இடையிலுள்ள டிஜிட்டல் இடைவெளியையும் குறைக்க முடிந்துள்ளது.

2021 நிறைவடையும் போது இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக 10 மாவட்டங்களை நிர்வகிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளதுடன் 2022 இறுதிக்குள் நாடு முழுவதிலும் 100%க்கு வரை கவரேஜைப் பெற்றுக் கொடுப்பதற்கு எம்மால் முடியுமென நாம் நம்புகின்றோம்.’ என தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் எவ்வித இடையூறுகளும் இன்றி தொடர்ச்சியாக தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தகவல் தொடர்புகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய முயற்சியின் ஒரு அங்கமாக இந்த ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு’ வேலைத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் டிஜிட்டல் மயமாக்கல் ஊடான பயணத்திற்கு தேவையான தொலைத்தொடர்பு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின், பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திர, ‘அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைக்கான டிஜிட்டல் வசதிகளை கட்டியெழுப்புவதற்காக எயார்டெல்லின் நடவடிக்கைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மயமாதல் விஸ்தரிக்கப்பட்டதுடன் அன்றாட வாழ்க்கையில் அனைத்து பிரிவுகளிலும் வேகமாக முன்னோக்கிச் செல்வதற்காக, அனைத்து இலங்கையர்களுக்குமான தொலைபேசி இணைப்பொன்று இருக்க வேண்டியது அத்தியாவசியமாகும். அதனால் இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் இந்த சிறந்த மற்றும் தொலைத்தூர வேலைத்திட்டத்துடன் ஒன்றிணையக் கிடைத்தமை மிகவும் பெருமைக்குரிய விடயமாகும்.’ என தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஒட்டுமொத்த இலங்கைக்கும் 4G தொழில்நுட்பத்தினால் நிர்வகிப்பதற்கான எயார்டெல்லின் நோக்கத்துடன் பாவனையாளர்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி சிறந்த சமிக்ஞை பரிமாற்றத்துடன் சிறந்த உள்ளக அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிட்டும்.
சிறந்த வேகம், சிறந்த டிஜிட்டல் சேவை மற்றும் விரிவான பரப்பில் புத்தாக்க செயலியுடன் கூடிய இந்த வலைப்பின்னல் நிர்வகிப்பை (Coverage) வீட்டிலிருந்தே அலுவலக நடவடிக்கைகளை செய்தல் மற்றும் Online கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் மிகவும் சிறந்ததாக அமையும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles