இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளன் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு 30 நாட்களுக்கான விசாவை பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் தற்போது போர் மூண்டுள்ளதால், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனினும், விசா காலம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்ப விரும்பும் உக்ரைன் பிரஜைகளை, நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையிலிருந்து உக்ரைக்கு நேரடி விமான சேவை இல்லாமையினால், வேறு நாடுகளின் ஊடாக பயணிக்கும் விமானங்களின் மூலம் சுற்றுலா பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.” – எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
