இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோன் பிறழ்வு

உலகில் மிக வேகமாக பரவும் ஒமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய வகை மாறுபாடு முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த பிறழ்வு காரணமாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம்.

கடந்த சில காலமாக உலகம் முழுவதும் கொரோனா அலையை உருவாக்குவதில் இந்த திரிபு வெற்றியடைந்துள்ளதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வின் படி, இந்த ஒமிக்ரோன் துணை வகை இலங்கையில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகள் மூலம் உடலில் கட்டமைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் திறன் இந்தப் புதிய துணை வகைக்குள்ளதென கண்டறியப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles