இலங்கையுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தயாராகிறது பங்களாதேஷ்

இலங்கையுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பங்களாதேஷ் தயாராகியுள்ளது.

சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவுடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே, பங்களாதேஷ் தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக தெற்காசிய நாடுகளின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திர சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தெற்காசிய நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் ஒன்றிணைந்து, புதிய வேலைத் திட்டமொன்று குறித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரியவருகிறது.

Related Articles

Latest Articles