இளைஞர்களை இலக்கு வைத்து கஞ்சா லேகியம் தயாரிப்பு!

இரத்தினபுரி மாவட்டம் மற்றும் சுற்று பிரதேசங்களில் கஞ்சா கலந்த போதைவஸ்துக்களின் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

எம்பிலிபிட்டிய மற்றும் தனமல்வில ஹம்பகமுவ உட்பட பல இடங்களிலுள்ள வனப்பிரதேசங்களில் சட்டவிரோத கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புதுறை ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் கடத்தப்படுவதாகவும் இவை பல்வேறு வழிகளிலும் கடத்தப்படுவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் இப்பகுதியில் கிடைக்கும் கஞ்சா செடிகளின் மூலம் லேகியம் மற்றும் குளிசை வடிவங்களிலான போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் வயது வந்தோர் மத்தியில் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை எதிர்கால இளைய தலை முறையின் எதிர்காலத்தைப் பாதி ப்படையச்செய்யும் அவதான நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்விடயத்தில் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

அண்மைக்காலமாக போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன் இவற்றில் கஞ்சா மூலப் பொருட்களில் ஒன்றாக கலந்திருப்பது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles