மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானின் அணுஉலைகளை தாக்குதவதற்கு ஈரான் தயாராகிவருகின்றது என தகவல் வெளியான நிலையில், இதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
அதேவேளை, லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தெற்கு லெபனானில் உள்ள மக்கள் வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து 50 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறினர். ஐநாவால் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட வடக்குப் பகுதியை நோக்கி மக்கள் சென்றுள்ளனர்.