‘உக்ரைனிலுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும்’

உக்ரைன்மீது முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரைனில் வாழும் இலங்கையர்களை பாதுகாப்பான முறையில் மீட்க வேண்டும் என இ.தொ.வின் உப தலைவரும், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், வெளியுறவு அமைச்சின் செயலாளரை தொடர்புக் கொண்டு  கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், துருக்கி வழியாக இவர்களை பாதுகாப்பான முறையில் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என   இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது என செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் குடும்பத்தினர், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் பதற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில அவர்களை பாதுகாப்பான முறையில் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக  இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles