உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல்! உறுதிப்படுத்தியது அரசு!!

உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. எனவே, உரிய நேரத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை. திட்டமிட்டவாறு தேர்தல் நடத்தப்படும். தங்களுக்குதான் மக்கள் ஆதரவு உள்ளது என மார்தட்டிக்கொள்ளும் எதிரணிகளுக்கும் மக்கள் யார் பக்கம் என்பதை தெளிவாக பார்க்க முடியும். எனவே, தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சி தலைவர்களுக்கு சவால் விடுக்கின்றேன்.

நாட்டு மக்கள் தேர்தலைகோரவில்லை. அரசியல் கட்சிகள்தான் துடிக்கின்றன. நாடு பற்றி எரியும்போது, அதனை அணைப்பதற்கு ஒத்துழைக்காத தரப்புகளுக்கு தேர்தல் ஊடாக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles