உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைப்பு உட்பட அத்தேர்தல் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று விசேட கட்சி தலைவர்கள் கூட்டம், சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதால், தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையிடுமாறுகோரி சபாநாயகருக்கு, தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அவ்வேளையிலேயே தேர்தல் சம்பந்தமாக விவாதிக்க இரு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விவாதத்தின் முடிவில் தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை எதிரணியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
