உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (03) கூடவுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், நிதிப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் பிற்போடப்பட்டது.
இந்நிலையில் புதிய திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட காரணங்கள் பற்றி ஆராயவே தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.
