பெருந்தோட்ட பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமனம்!

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்போதே சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles