ஒசுசல ஊடாக இலவச மருந்து

அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles