கம்பளை நகருக்கு அருகில் அமைந்துள்ள டாட்ரி தேயிலை தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்குவதற்காக வைக்கபட்டிருந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதாக முகாமையாளரினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மேற்படி தொழிற்சாலை ஊழியர்களுக்கு சித்திரை புத்தாண்டு முற்பண கொடுப்பனவு கடந்த 08 ஆம் திகதியிலிருந்து கட்டம் கட்டாமாக சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருந்த நிலையில்
மேலும் சில ஊழியர்களுக்கு வழங்குவதற்காக அலுவலகத்தில் (லாச்சியில்) வைக்கப்பட்டிருந்த 29 இலட்சத்து 74 ஆயிரத்து முன்நூற்றி என்பத்தி ஒரு ரூபாய் பணமே காணாமல் போயுள்ளதாக 10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தொழிற்சாலையில் கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்டிருந்த பொழுதும் அலுவலக அறை பகுதியில் கெமரா பொருத்தப்பட்டிருக்காமையால் விசாரணைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்
இதே வேளை குறித்த தொழிற்சாலையில் இரவு நேரங்களிலும் ஊழியர்கள் வேலை செய்துவருவதால் பணத்தினை வெளியிலிருந்து வந்து யாரும் திருடியிருக்க வாய்பில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கம்பளை நிருபர்










