பண்டாரகம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை, காகமொன்றால் சுமார் அரை மணிநேரம்வரை தடைபட்டது.
பண்டாரகம நகர் பகுதிக்கு 5 நாட்களுக்கு பின்னர், இன்றுதான் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருளை பெறுவதற்கு பெறுவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
எனினும், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இருந்த மின்மாற்றியொன்றில் (Transformer) காகமொன்று சிக்கி உயிரிழந்ததால், மின்மாற்றி வெடித்து மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாததால் அரைமணிநேரம்வரை எரிபொருள் விநியோகம் தடைபட்டது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ,சம்பவ இடத்துக்கு வருகை தந்து, காகத்தை அகற்றி, இயல்பு நிலையை ஏற்படுத்தினர்.
