காங்கேசன்துறை அபிவிருத்திக்கு இந்தியா 1, 700 கோடி ரூபா கடனுதவி!

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா நான்கரைக் கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ஆயிரத்து 700 கோடி ரூபா) கடனாக வழங்கியுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்தியின் பின்னர் இந்தியாவில் இருந்துநேரடியாக சரக்குப் போக்குவரத்து  நடவடிக்கைகள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles