காணி தகராறு காரணமாக 60 வயதுடைய நபரொருவர் தனது மூத்த சகோதரியின் கணவரை (வயது 74) மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர்.
146 ஹெலபதுகம கல்நேவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே மேற்படி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஹெலபதுகம பகுதியைச் சேர்ந்த 60 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான நபர் கடந்த 16 ம் திகதி ஹெலபதுகம பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த போது குறித்த இடத்திற்கு சென்று அவரது மூத்த சகோதரியின் கணவருக்கும் அவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் போது சந்தேக நபரான சகோதரர் சகோதரியையும் அவரது கணவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயத்திற்குள்ளான இருவரையும் கல்நேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரியின் கணவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










