குட்டி தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் கட்சிகள்!

உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறுவது ஏரத்தாள உறுதியாகியுள்ளது. நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் நடந்த மொட்டு கட்சி கூட்டங்களின்போது தேர்தல் சம்பந்தமாக விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன. அதேபோல தேர்தல் நடைபெறுவது உறுதி என்ற ஓலையும் எதிரணிகளுக்கு ஆளுங்கட்சியால் இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் குட்டி தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை ஐக்கிய தேசியக்கட்சியும் ஆரம்பித்துள்ளது. தொகுதி அமைப்பாளர் நியமனம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

பிரசன்ன ரணதுங்க, பிரியங்கர ஜயரத்ன உட்பட மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர், தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பார்கள் என நம்பப்படுகின்றது.

மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தியும் இம்முறை பாரிய பலத்துடன் களமிறங்கவுள்ளது.

Related Articles

Latest Articles