லுணுகலைப் பகுதியின் அடாவத்தை பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த நான்கு பெண் தொழிலாளர்கள், குளவிக் கொற்றலுக்கிலக்காகி, லுணுகலை அரசினர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் இன்று, அடாவத்தை பெருந்தோட்டப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அடாவத்தை பெருந்தோட்டப் பிரிவில் தேயிலைத் தளிர்களைக் கொய்யும் கடமையில் பெண்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, மரமொன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து, பெண் தொழிலாளர்களை கொற்றத் தொடங்கின.
இச் சம்பவத்தில், பலர் குளவிக் கொற்றலுக்கிழக்கான போதிலும், ஆபத்தான நிலையிலுள்ள நான்கு பெண் தொழிலாளர்களே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பலர் ஆரம்ப சிகிச்சைகளைப் பெற்று வீடு
திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை
