கைக்குண்டு மீட்பு – முன்னாள் போராளியும் கைது! விசாரணைகளில் வெளியாகும் ‘பகீர்’ தகவல்கள்!!

கொழும்பு, நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிகள் அமைப்பில் இருந்தபோது இவர் இம்ரான் – பாண்டியன் படையணியில் செயற்பட்டுள்ளார் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் மலசலக்கூடத்திலிருந்து கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.

இதனையடுத்து திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கி பரிசு பெரும் நோக்கிலேயே தான் குண்டை வைத்ததாகவும், கொழும்பு விஜயராம பகுதியிலுள்ள அமைச்சரொருவரின் வீட்டில் புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவேளை குறித்த குண்டு கிடைத்தாகவும் குறித்த இளைஞர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

எனினும், அரச  புலனாய்வு பிரிவு மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தின. இதன்பிரகாரம் முதலாவது சந்தேக நபருக்கு கைக்குண்டை வழங்கிய நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று உப்புவெளி பகுதிக்கு சென்ற புலனாய்வு பிரிவு மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் 40 வயதுடைய முன்னாள் போராளியை கைது செய்துள்ளனர்.

அதேவேளை, கைக்குண்டை வழங்கிய குறித்த நபர் அதை வெடிக்க வைப்பது தொடர்பில் 6 நாட்கள் பயிற்சி வழங்கியதாக வைத்தியசாலையில் குண்டை வைத்த சந்தேக நபர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். பயிற்சி வழங்கப்பட்ட இடத்தையும் பாதுகாப்பு தரப்பினர் நேற்று கண்காணித்தனர். முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் போராளி குறித்த கைக்குண்டை வழங்கினாரா அல்லது அமைச்சரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதா என்பது உட்பட இது தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles