மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் பெர்ணான்டோ உள்ளிட்ட 6 பேர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுல பிரசன்ன, கரந்தெணிய பிரதேச சபை உறுப்பினர் சமீர சதுரங்க, சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த ரோஹண, பந்துல ஜயமான்ன மற்றும் தினெத் கீத்திக்க ஆகியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுங்கட்சி எம்.பிக்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
