கொதிக்கும் கொழும்பு அரசியல்: 8 நாட்களில் பிரச்சார புயல் ஓய்வு!

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்களின் இறுதிகட்ட தேர்தல் பிரசார நடவடிக்கை சூடுபிடித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன.

எனவே, பிரசாரப் பணிகளுக்கு இன்னும் 08 நாட்களே எஞ்சி இருப்பதால் பிரதான வேட்பாளர்கள் தற்போது சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் கிராம மற்றும் நகர் பகுதிகள் இக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது. பிரதான நகர்களிலும், கிராமங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. தேர்தல் தினத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

Related Articles

Latest Articles