‘கோட்டா கோ ஹோம்’ – மற்றுமொரு மலையக இளைஞன் நடைபவனி!

நுவரெலியா – டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து இன்று (05.05.2022) காலை அரசாங்கத்திற்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் ஏமாற்றம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த தோட்டத்தில் உள்ள 33 வயதுடைய புஷ்பநாதன் தியாகு என்ற இரண்டு பிள்ளையின் குடும்பஸ்தர் கொழும்பில் காலிமுகத்திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தோட்டத்திலிருந்து நடைபவனியாக 178 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் பயணத்தினை ஆரம்பித்தார்.

இவரின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நடை பயணம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தோட்டத்திலுள்ள 150 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கோட்டா கோ ஹோம் என தெரிவித்து தேங்காய் உடைத்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் தேசிய கொடியை ஏந்தி நடை பயணத்தை ஆரம்பித்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்த இம்மக்கள் 03 கிலோமீட்டர் தூரம் கொண்ட டயகம நகரம் வரை பேரணியாக வருகை தந்தனர்.

கொழும்பு நோக்கி பயணம் செய்யும் குறித்த நபருக்கு ஆதரவாக நகரத்தில் உள்ள வர்த்தகர்கள் பிரதேச மக்கள் அமோக வரவேற்பு வழங்கினார்கள். அதேவேளை இவருக்கு மன்றாசி நகரத்திலும் வரவேற்பு வழங்கப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles