ஏ – 9 பிரதான வீதியின் கவரக்குளம் பகுதியில் இன்று( 02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.
40 வயதான தாயும் 13 வயதான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், விபத்தில் படு காயமடைந்த தந்தை மற்றும் 11 வயதான மகன் ஆகியோர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள், பயணித்த ஆட்டோ, இன்று(02) அதிகாலை 5.29 மணியளவில் கவரக்குளம் பிரதேசத்திலுள்ள ஓடையொன்றிற்குள் குடைசாய்ந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநரின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
