சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் உப தலைவர் அகில விராஜ்காரியவசம் உறுதிப்படுத்தினார்.
நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் இருந்து மீள்வதற்கான யோசனை இதன்போது ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது.
