சம்பூரிலும் வெளிவந்தன மனித எலும்பு எச்சங்கள்

திருகோணமலை, சம்பூர் கடற்கரையை அண்மித்த பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் சில மனித என்பு எச்சங்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளதுடன், நாளைமறுதினம் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ‘மக்’ எனப்படும் மிதிவெடி அகற்றும் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை மிதிவெடி அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

நேற்று அந்தப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது மனித என்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. சிதைவடைந்த மண்டையோடு. கால் என்புப் பகுதிகள் என்பனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு வந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் அந்த இடத்தை பார்வையிட்டார். மிதிவெடி அகற்றும் பணியை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.

என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சட்ட மருத்துவ அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் நாளைமறுதினம் புதன்கிழமை அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியிலேயே இந்த மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles