சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க முற்போக்கு கூட்டணியும் முடிவு!

சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்துள்ளது.

இதன்படி மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன மாநாட்டில் பங்கேற்கமாட்டா என அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ,

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.

அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை திருப்தி படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம். ” – என்றார்.

Related Articles

Latest Articles