ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் என்பன மாநாட்டில் பங்கேற்கின்றன.
